Namakkal Travel Guide : நாமக்கல் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்கள்

கொல்லி மலை, குகை கோயில்கள், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி என நாமக்கல் மாவட்டத்தில் சுற்றிப் பார்ப்பதற்கு எக்கச்சக்கமான இடங்கள் உள்ளன.

Raja Balaji
namakkal tourism

நாமக்கல் மாவட்டம் என்றாலே நமக்கு கோழியும், முட்டையும் தான் நியாபகத்திற்கு வரும்.  ஏனென்றால் நாமக்கல் மாவட்டம் முட்டை கோழி வளர்ப்பில் முதன்மை வகிக்கிறது. அதுமட்டுமின்றி கல்வியில் சிறந்த மாவட்டமாகவும் நாமக்கல் விளங்குகிறது. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் இங்குள்ள கல்வி நிலையங்களில் படித்த பல மாணவர்கள் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கின்றனர். நாமக்கல் மாவட்டம் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.

best places in namakkal

கொல்லி மலை 

இது கிழக்கு தொடர்ச்சி மலைகளின் கடைசி மலை தொடராகும். இந்த கொல்லி மலை அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரம் அடி உயர மலை பிரதேசமாக கொல்லி மலை உள்ளது. நாமக்கல்லில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவில் இது அமைந்திருக்கிறது. கொல்லி மலையில் பல சித்தர் குகைகள் உள்ளன. கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, கொல்லிபாவை கோயில், சீக்குபாறை, மாசிலா நீர்வீழ்ச்சி, படகு இல்லம் போன்ற ஆன்மிக தலங்களும், சுற்றுலா தலங்களும் உள்ளன.  சுற்றுலாத்துறை இந்த இடங்களில் கவனம் செலுத்துவதால் இவை தூய்மையாகவும் இருக்கின்றன

மலைக்கோட்டை 

இது நாமக்கல் மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த மலைக்கோட்டையாகும். இந்த கோட்டையானது ஒன்றை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள குறுகலான படிகட்டுகளின் மூலம் மலையின் உச்சியை நாம் அடையலாம். இந்த மலையில் நரசிம்ம சுவாமி மற்றும் ரங்கநாத சுவாமி குகைக் கோயில்கள் இருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மன்னர்களிடையே நடந்த போர் குறித்த தகவல்கள் இந்த கோட்டையில் உள்ளது.

அர்த்தநாரீசுவரர் கோயில்

இந்த கோயில் நாமக்கல்லில் இருந்து 38 கிலோ மீட்டர் தொலைவில் திருச்செங்கோட்டில் அமைந்துள்ளது. இங்கு மேற்கு பகுதியில் இருந்து பார்க்கும் போது ஆண் படுத்திருப்பது போலவும் தென் மேற்கு பகுதியில் இருந்து பார்க்கும் போது பெண் படுத்திருப்பது போலவும் தெரியும். சிவனும் பார்வதியும் சேர்ந்த மூலவராக அர்த்தநாரீசுவரர் பக்தர்களுகு அருள்பாலிக்கிறார்.

namakkal travel guide

மேலும் படிங்க திருச்சி மாநகரின் முக்கியமான 7 சுற்றுலா தலங்கள்

ஜேடர்பாளையம் தடுப்பணை

ஜேடர்பாளையம் தடுப்பணை நாமக்கல் நகரில் இருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இது காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இங்கு படகு சவாரி செய்ய ஆறு பைபர் படகுகள் உள்ளன. குழந்தைகளை மகிழ்விப்பதற்காக பூங்காவும் இருக்கின்றது. 

நாமக்கல் ஆஞ்சநேயர்

இந்த கோயில் நாமக்கல் மலைக்கோட்டையின் அடிவாரத்தில் உள்ளது. இங்கு ஒற்றை கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி ஆஞ்சநேயர் சிலை இந்தியாவிலேயே பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலையாகும்.

namakkal famous temples list

தத்தகிரி முருகன் கோயில் 

இந்த முருகன் கோயில் நாமக்கல் நகரில் இருந்து 11 கிலோ தொலைவில் சிறிய மலையின் மேல் அமைந்துள்ளது. புகழ்பெற்ற முருக பக்தரான கிருபானந்த வாரியார் அமைதி மற்றும் சாந்தம் பெறுவதற்காக இந்த கோயிலுக்கு வந்து சென்றதாகச் சொல்லப்படுகிறது. 

மேலும் படிங்க மதுரை மாநகரின் முக்கியமான 6 சுற்றுலா தலங்கள்

நைனாமலை 

இந்த மலை 17 கிலோ மீட்டர் தொலைவில் மூன்று கிலோ மீட்டர் உயரத்திற்கு செங்குத்தாக அமைந்துள்ளது. மூன்றாயிரம் படிகட்டு ஏறி மேலே சென்றா வரதராஜ பெருமாளை தரிசிக்கலாம்.

Disclaimer