Trichy Travel Guide : திருச்சி மாநகரின் முக்கியமான 7 சுற்றுலா தலங்கள்

தூய்மை நகரமான திருச்சியில் தினமும் சுற்றுலா செல்லும் அளவிற்கு எண்ணற்ற இடங்கள் உள்ளன.

Raja Balaji
trichy tavel guide

தமிழகத்தின் மூன்றாவது பெரிய மாநகராட்சியான திருச்சிராப்பள்ளியில் சுற்றிப் பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் தொடங்கி இயற்கையான அருவிகள் வரை திருச்சியில் காணத்தக்க பல சுற்றுலா தலங்கள் இருக்கின்றன.

மலைக்கோட்டை 

திருச்சி மாவட்டத்தின் புகழ் வாய்ந்த அடையாளச் சின்னமாக மலைக்கோட்டை விளங்குகிறது. 275 உயர அடி உயர மலையில் மேல் பிள்ளையார் அமர்ந்திருப்பதால் இது உச்சிப்பிள்ளையார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. மலையின் பாதி தூரத்தில் சிவபெருமானுக்காக தாயுமானவர் சுவாமி கோயிலும் உள்ளது. இங்கு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் உள்ளன.

best places to vist in tiruchirappali

அரங்கநாதசுமாமி திருக்கோயில் 

ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைணவ கோயில்களில் முதன்மையானதாக திகழ்கிறது. இந்தக் கோயில் சுமார் 156 ஏக்கர் சுற்றளவில் கட்டப்பட்டுள்ளது. கோயிலில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன.  திருச்சியில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் உள்ள இராஜகோபுரத்தின் மொத்த எடை 128 ஆயிரம் டன்களாகும்

எறும்பீஸ்வரர் கோயில் 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள எறும்பீஸ்வரர் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இந்தக் கோயில் 60 அடி உயர குன்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இங்கு 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழப் பேரரசின் கல்வெட்டுகள் உள்ளன. இந்தக் கோயில் தென்னிந்தியாவின் கைலாஷ் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் கோயில் படிகட்டுகள் கிரானைட்டால் அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும் படிங்க மதுரை மாநகரின் முக்கியமான 6 சுற்றுலா தலங்கள்

trichy tourism

கல்லணை 

இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் கட்டப்பட்டதாகும். கல்லணை உலகின் பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது. கல்லணை ஆயிரத்து 80 நீளம் கொண்ட மிகப்பெரிய அணைகளில்  ஒன்றாகும். பல நூற்றாண்டுகளாகக் காவிரி ஆற்றில் வரும் வெள்ளத்தை இந்த அணை தடுத்து வருகிறது. கல்லணையை கட்டி முடிக்க 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனதாகவும் கூறப்படுகிறது. 

வயலூர் முருகன் கோயில் 

திருச்சி மாநகரில் இருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில் குமார வயலூர் என்ற ஊரில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. சிவபெருமானின் மகன் முருகருக்காக ஒன்பதாம் நூற்றாண்டில் இடைக்கால சோழர்கள் இந்தக் கோயிலைக் கட்டியதாகக் கருதப்படுகிறது. தற்போது இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கோயில் அருகே உய்யகொண்டான் ஆறு உள்ளது.

புளியஞ்சோலை அருவி

இயற்கை நீரூற்றுகளில் குளிக்க விரும்புவோருக்கு இது அற்புதமான இடமாகும். கொல்லி மலையில் அடிவாரத்தில் இந்த நீரூற்று அமைந்துள்ளது. திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து இந்த இடம் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மலையேற்றத்திற்கும் இது அற்புதமான இடமாகும்.

famous spots in trichy

மேலும் படிங்க கோவையின் 75 கி.மீ சுற்றளவில் உள்ள பசுமையான சுற்றுலா தலங்கள்

வண்ணத்துப்பூச்சி பூங்கா 

இந்த பூங்கா ஸ்ரீரங்கம் மேலூர் அருகே காவிரி ஆற்றின் கரையோரம் சுமார் 27 ஏக்கர் பரப்பளவில் 2014ஆம் ஆண்டு தமிழக அரசால் 8 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. வண்ணத்துப்பூச்சி இனங்களின் பாதுகாப்பை உறுதி செய்திட இந்த பூங்கா அமைக்கப்பட்டது. தினமும் இங்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். திருச்சி மாவட்டத்தில் சிறந்த போட்டோஷூட் இடமாகவும் இந்த பூங்கா உள்ளது.

Disclaimer