Aleppey Fish Curry : கேரளா ஸ்டைல் அலப்பி மீன் கறி செய்முறை

கேரளா ஸ்டைல் மீன் கறி செய்முறை உங்களுக்கு மீன் உணவுகள் மீதான பிரியத்தை பன்மடங்கு அதிகப்படுத்தும். அடிக்கடி சுவைக்க விரும்புவீர்கள்

Raja Balaji
Alleppey fish curry recipe

ஊட்டச்சத்து நிறைந்த உணவு செய்முறையில் நாம் பார்க்கப் போவது அலப்பி மீன் கறி. நாம் கேரளாவில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்றால் அங்குள்ள உணவகங்களில் சிக்கன், மட்டனை விட மீனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு இருக்கும். அதன் ருசியையும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அதே சுவையில் உங்களால் வீட்டிலேயே மீன் கறி தயாரிக்க முடிந்தால் ? நினைத்துப் பாருங்கள். குடும்ப உறுப்பினர்களின் மனதை வென்று விடலாம். அந்த வகையில் அலப்பி மீன் கறி எப்படி செய்வது என பார்க்கலாம். 

அலப்பி மீன் கறி செய்யத் தேவையானவை 

Alleppey fish curry

  • வஞ்சரம் மீன் 
  • தேங்காய் எண்ணெய் 
  • தேங்காய் பால் 
  • மாங்காய் 
  • மிளகாய் தூள் 
  • மஞ்சள் தூள் 
  • இஞ்சி
  • தண்ணீர்
  • உப்பு

கவனம் கொள்க

அலப்பி மீன் கறி செய்வதற்கு இரண்டு முக்கியமான விஷயங்கள் தேவை. ஒன்று புளிப்பு சுவை தரும் மாங்காய். ஏனென்றால் நாம் புளி தண்ணீர் சேர்க்கப்போவதில்லை. அதே போல பெரிய வெங்காயத்திற்கு பதிலாக சின்ன வெங்காயம் சேர்க்கப்போகிறோம். இதுவே மற்ற மீன் குழம்புகளுக்கும் அலப்பி மீன் கறிக்கும் உள்ள வித்தியாசம்.

மேலும் படிங்க செட்டிநாடு ஸ்டைலில் இறால் மசாலா செய்முறை!

அலப்பி மீன் கறி செய்முறை

  • முதலில் பேனில் 50 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு பதினைந்து சின்ன வெங்காயங்களை போட்டு வதக்குங்கள்.
  • சின்ன வெங்காயம் வதங்கும் போதே இரண்டு பச்சை மிளகாயை வெட்டிச் சேர்க்கவும்.
  • அடுத்ததாக இஞ்சி 25 கிராம் அளவிற்கு சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் போடுங்கள்.
  • இவற்றை பழுப்பு நிறத்திற்கு வறுக்கவும். இதையடுத்து தேவையான அளவு கறிவேப்பிலை சேருங்கள்.
  • இப்போது ஒரு முழு மாங்காயின் தோலை நீக்கி பீஸ் பீஸாக வெட்டி போடவும்
  • அடுத்ததாக இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் மஞ்சள் சேர்த்து கிளறிவிட்டு ஒரு நிமிடம் கழித்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்
  • 15 நிமிடங்களுக்கு இதை தொந்தரவு செய்யாமல் மூடி போட்டு வேக வைக்கவும்.
  • இதையடுத்து 100 மில்லி லிட்டர் தேங்காய் பால் சேர்க்கவும். இதோடு ஒரு ஸ்பூன் சோள மாவை 25 மில்லி தண்ணீரில் கரைத்து பேனில் ஊற்றுங்கள்.
  • தேங்காய் பால் திரிந்து போக வாய்ப்புள்ளது எனவே தான் சோள மாவை தண்ணீரில் கரைத்து சேர்க்கிறோம்.
  • இதனால் மீன் கறி கிரீமியாக மாறும். இதன் பிறகு தேவையான அளவு உப்பு சேருங்கள்.
  • தற்போது 250 கிராம் வஞ்சரம் மீனை நன்கு கழுவி பீஸ் பீஸாக வெட்டி பேனில் போடுங்கள்.
  • அனைத்தையும் கிளறிவிட்டு குறைந்த தீயில் பத்து நிமிடங்களுக்கு வேக வைக்கவும்
  • அவ்வளவு தான் ருசியான அலப்பி மீன் கறி ரெடி. மீன் நன்றாக வெந்து இருந்தால் பாதியாக வெட்டும் போது ஜூஸியாக தெரியும்.
  • சாதத்துடன் பிரட்டி சாப்பிடவும், இடியாத்துடன் தொட்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

மேலும் படிங்க கோழி கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு மசாலா

Disclaimer