Planning A Trip: பயணத்தின் போது ஆரோக்கியமாக இருக்க ஐந்து வழிகள்!

பொதுவாக பயணத்தின் போது உடல் சோர்வு அதிகமாகி நோய்வாய்ப்படும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே ஆரோக்கியமாக பயணம் செல்ல ஐந்து எளிய குறிப்புகளை நாங்கள் தருகிறோம்.

S MuthuKrishnan
tourism life

பொதுவாகவே பயணம் செல்வது என்றால் குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கும். ஏனென்றால், நாளை நாம் எந்த இடத்திற்கு செல்ல போகிறோம், இயற்கை காட்சிகளை ரசிக்க போகிறோம் என்று முதல் நாளே பயணத்தை குறித்து நினைத்துப் பார்க்கத் தொடங்குவோம். அந்த வகையில் பயணம் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக அமையும். நீங்கள் ஏதேனும் பயணத்தை திட்டமிடுகிறீர்களா?  பயணம் செல்லும் போது பொதுவாக உங்களை சுற்றுலா பயணி என்று அனைவரும் சொல்வார்கள். அதே வேலையில் சுற்றுலா பயணிகள் வேடிக்கை மற்றும் ஓய்வை தேடுபவர்கள். மறுபுறம் பயணத்தின் போது உடல் சோர்வு அதிகமாகி நோய்வாய்ப்படும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே ஆரோக்கியமாக பயணம் செல்ல 5 எளிய குறிப்புகளை நாங்கள் தருகிறோம்.

பயணத்தின் போது ஆரோக்கியமாக இருக்க ஐந்து வழிகள்

planning a tour

நீரேற்றமாக இருங்கள்

பொதுவாகவே பயணம் என்பது உடல் சோர்வை உள்ளடக்கியது. எனவே முடிந்த அளவு அவ்வப்போது தண்ணீர் பருகுவது அவசியம். முறையான உடல் நீரேற்றம் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க உதவுவது மட்டுமல்லாமல் பயணத்தின் போது ஏற்படும் பொதுவான உடல்நல பிரச்சனைகள் மற்றும் குடல் பிரச்சனைகளின் அபாயத்தை தடுக்க இது உதவும்.

மேலும் படிக்க: காதலர் தினத்தில் யாரும் பார்க்காத இடங்களுக்கு செல்லத் திட்டமா?

ஆரோக்கியமான காலை உணவை தேர்ந்தெடுங்கள்

ஆரோக்கியமான காலை உணவை தொடங்கி அன்றைய பயண நாளை தொடங்குங்கள். இது சரியான குறிப்பில் நாளை தொடங்க உங்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், உங்களுக்கு உடல் ஆற்றலை ஏற்றி, அமிலத்தன்மை மற்றும் உடல் வீக்கம் மற்றும் பிற உடல் நல கேடுகளின் அபாயங்களை குறைக்க உதவும். முடிந்த அளவு பயணம் செல்லும் போது காலை லேசான உணவுகளை உண்ணவும். குறிப்பாக இட்லி, இடியாப்பம், போன்ற லேசான உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.

கெட்டுப் போகாத தின்பண்டங்களை எடுத்துச் செல்லவும்

பயணம் செல்வது நிறைய நடைபயிற்சியை உள்ளடக்கியது. அதாவது உங்கள் உணவு மிக விரைவில் ஜீரணமாகி குறுகிய இடைவெளியில் பசியுடன் இருக்கத் தோன்றும். அதனால் கெட்டுப் போகாத தின்பண்டங்களை எடுத்து செல்வது அவசியம். பிஸ்கட், பழங்கள் ஆகியவற்றை முறையாக பேக் செய்து எடுத்துச் செல்லுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்காமல் விரைவான பசி வேதனையை தடுக்கும்.

ஜங்க் உணவுகளை தவிர்க்கவும்

பொதுவான தினசரி நாட்களில் தவிர்க்கக் கூடிய ஜங்க் உணவுகளை பயணங்களில் முற்றிலும் தவிர்க்கவும். குறிப்பாக பீட்சா, பிரைட் ரைஸ், சிக்கன் ரைஸ் போன்றவற்றை எடுத்துச் செல்லக்கூடாது. உணவும் உங்கள் பயணத்தோடு கைகோர்த்து வரக்கூடியது. ஜங்க் உணவுகளில் சுவை மற்றும் நிறத்திற்காக செயற்கையான பொருட்கள் மற்றும் ரசாயனம் கலக்கப்படும். எனவே குறுகிய காலத்தில் செல்லக்கூடிய பயணங்களுக்கு முற்றிலும் ஜங்க் உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதற்கு மாற்றாக நல்ல உணவுகளை தேர்ந்தெடுக்கவும்.

பாதுகாப்பான உணவுகளை தேடிச் செல்லுங்கள்

பயணத்தின் போது பல இடங்களில் கடைகளில் இடத்திற்கு ஏற்றார் போல் உணவுகள் கிடைக்கும். நீங்கள் உணவு பிரியராக இருந்தால் பயணத்தில் எடுத்துக்கொள்ளப் போகும் உணவை ஆராய்வது மிக முக்கியம். எனவே நோய்வாய்ப்படாத அளவுக்கு உணவுகளை பரிசோதித்து பாதுகாப்பான உணவு தேர்வுகளுக்கு சென்று உங்கள் பயணத்தை முழுமையாக அனுபவிக்கவும்.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் காதலர்களுக்காகவே உள்ள தேனிலவு இடங்கள் இதோ!

பயணத்திற்கு செல்லக் கூடியவர்கள் இந்த பாதுகாப்பான குறிப்புகளை பின்பற்றி பயணத்தின் அழகை முழுமையாக அனுபவிக்கவும்.

 
Disclaimer