உடல் எடையை குறைக்க இந்த விதைகளை சாப்பிட்டால் போதும்!

உடல் பருமன் பிரச்சனையால் பலரும் அவதிப்படுகின்றனர். உடல் எடையை குறைக்க விரும்புவோர் இந்த விதைகளை சாப்பிடலாம்.

 
Staff Writer
weight loss foods

இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் பிரச்சனையால் பலரும் அவதிப்படுகின்றனர். இதற்க்கு காரணம் உணவு முறை தான். ஆரோக்கியமான உணவு வகைகளை நம்மில் பலரும் உணவில் சேர்த்து சாப்பிடுவது இல்லை. பழங்கள், காய்கறிகள், நட்ஸ் வகைகள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்து கொள்வது அவசியம். உடல் எடையை குறைக்க விரும்புவோர் இந்த விதைகளை தங்கள் தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை எளிதில் குறையும் என்று கூறப்படுகிறது.  

பூசணி விதை:

புரதசத்து, நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த பூசணி விதைகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிறு நிறைந்து அடிக்கடி பசி எடுக்காமல் திருப்தியாகவும் உணர்வீர்கள். இந்த பூசணி விதைகளில் உள்ள மெக்னீசியம் நம் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இதிலுள்ள இரும்புசத்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கு பெரிதும் உதவுகிறது. நீங்கள் வீட்டிலேயே பூசணி விதைகளை சூரிய ஒளியில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நன்கு காயவைத்து பயன்படுத்தலாம். அல்லது பூசணி விதைகளை தனியாக கடைகளில் வாங்கியும் பயன்படுத்தலாம். இன்றே உங்கள் எடையைக் குறைக்கும் முயற்சியின் முதற்படியாக பூசணி விதைகளை உணவில் சேர்த்துப் பாருங்கள்.

மேலும் படிக்க: இலவங்கப்பட்டை தண்ணீருடன் உங்கள் நாளைத் தொடங்கினால் என்ன நடக்கும்?

எள் விதைகள்:

இந்த எள் விதைகளில் உள்ள புரதம், வைட்டமின் பி 1, நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உங்கள் தினசரி உணவில் சேர்த்து உட்கொள்ளும்போது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறைந்து உடல் எடை எளிதில் குறைய பெரிதும் உதவுகிறது. இந்த எள் விதைகளை காய்கறி சாலட்களில் சேர்த்து சாப்பிடலாம். 

ஆளி விதைகள்:

flax seeds

உடல் எடை குறைக்க விரும்புவோர்க்கு இந்த ஆளி விதைகள் மிகச் சிறந்த உணவு. இதில் நார்ச்சத்து, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. மேலும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த ஆளி விதைகளை பொடி செய்து நல்லெண்ணெயுடன் கலந்து சாதத்தில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

சூரியகாந்தி விதைகள்:

சூரியகாந்தி விதைகளில் உள்ள புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நம் உடலுக்கு தேவையான அணைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. இது உங்கள் எடை இழப்பு பயணத்திற்கு சிறந்த உணவு. சூரியகாந்தி விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இது உணவு செரிமானத்தை ஊக்குவித்து அடிக்கடி பசி எடுக்காமல் தடுக்கும். மேலும் இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஏராளமாக இருப்பதால், அவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மேலும் படிக்க:  தினமும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் குடித்தால் என்ன நடக்கும்!

சியா விதைகள்:

மருத்துவ ஆய்வு ஒன்றில் சியா விதைகள் பசியைக் குறைப்பதாகவும், எளிதில் உடல் எடையைக் குறைக்க உதவுவதாகவும் கூறப்படுகிறது. சியா விதைகளில் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம் அதிக அளவு நிறைந்துள்ளதால் இது உடல் எடையை குறைக்க உதவும். பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. காய்கறி சாலட், ப்ரூட் சாலட் போன்ற உணவுகளில் சியா விதைகளை சேர்த்து சாப்பிடலாம். தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் சியா விதைகள் சேர்த்து குடித்து வந்தால் உடல் பருமன் குறையும். 

Image source: google

Disclaimer