Pongal Tamil Releases : கேப்டன் மில்லர் Vs அயலான் Vs குண்டூர் காரம்... பொங்கலுக்கு 8 படங்கள் ரிலீஸ்

திரையரங்குகளிலேயே ஒரு வாரத்திற்கு பொங்கல் கொண்டாடும் விதமாக அரை டஜனுக்கு மேலான திரைப்படங்கள் இந்த பொங்கலுக்கு வெளியாகின்றன

Raja Balaji
Pongal fest movies

பொங்கல் பண்டிகை வெளியீட்டுக்கு அரை டஜன் தமிழ் படங்கள் தயாராக இருந்த நிலையில் தற்போது நான்கு படங்கள் மட்டுமே வெளியாகின்றன. வெள்ளிக்கிழமை ரிலீஸ் செய்தால் சனி, ஞாயிறு வார விடுமுறையை தொடர்ந்து பொங்கல் விடுமுறைகளையும் சேர்த்து ஆறு நாட்களுக்கு வசூலை அள்ளிவிடலாம் என படத்தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழில் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ், அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் 1 படங்களும், தெலுங்கில் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம், நாகார்ஜூனாவின் நா சாமி ரங்கா, ஹனுமன் ஆகிய படங்கள் வெளியாகின்றன.

தமிழகத்தில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் இருப்பதால் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் கேப்டன் மில்லர், அயலான் படங்களுக்கு கடும் சவால் அளிக்கும்.

Captain Miller

கேப்டன் மில்லர் 

அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது. பட்டாஸ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷை வைத்து மீண்டும் படம் தயாரித்துள்ள சத்ய ஜோதி நிறுவனம் பெரியளவு விளம்பர வேலைகளில் ஈடுபடவில்லை. எனினும் நல்ல படத்திற்கு விளம்பரம் தேவையில்லை என தனுஷும், இயக்குநர் அருண் மாதேஷ்வரனும் நம்புகின்றனர்.  

அயலான்

ayalaan

பல மாதங்களுக்கு முன்பாகவே வெளியாகி இருக்க வேண்டிய சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் கிராஃபிக்ஸ் பணிகள் காரணமாகத் தாமதமாகி கொண்டே இருந்தது. குழந்தைகளுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும் என சிவகார்த்திகேயன் நம்புகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் இருப்பதால் எப்படியும் ஒரு வாரத்திற்கு திரையரங்குகளில் கூட்டம் இருக்கும். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்

மெர்ரி கிறிஸ்துமஸ் 

Merry Christmas

இது பேன் இந்தியா படமாக உருவாகியுள்ளது. தமிழில் மட்டுமே விஜய் சேதுபதியை வைத்து விளம்பர வேலைகள் நடக்கின்றன. வடக்கில் கத்ரினா கைஃப் முன்னிலைப்படுத்தப்படுகிறார். கிரைம் திரில்லராக உருவாகியுள்ள மெர்ரி கிறிஸ்துமஸ் தமிழ் மொழியில் டேக் ஆஃப் ஆக கேப்டன் மில்லர், அயலான் படங்களின் ஆடியன்ஸை தன் வசம் இழுக்க வேண்டும்

குண்டூர் காரம் 

தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் முன்பதவில் தமிழ் படங்களுக்கே டஃப் கொடுக்கிறது. ஆக்‌ஷன், காதல், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்து அம்சங்களும் கொண்ட படமாக குண்டூர் காரம் உருவாகியிருக்கிறது. தெலுங்கு மாநிலங்களில் குண்டூர் காரம் 180 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது

Guntur Kaaram

இதர படங்கள் 

நாகார்ஜூனாவின் நா சாமி ரங்கா, ஹனுமன் திரைப்படங்கள் சம்பிரதாய வெளியீட்டாகவே பார்க்கப்படுகிறது. நல்ல கதைக்களம் இருந்தால் மட்டுமே இந்த படங்கள் வசூலை குவிக்க முடியும். அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் 1 திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது என்ற செய்தியைத் தவிர படத்தை விளம்பரம் செய்யும் அறிகுறி கூட தமிழகத்தில் எங்கும் தென்படவில்லை.

அரண்மனை 4, லால் சலாம் படங்களை போல இந்தப் படமும் ரிலீஸில் இருந்து கழன்று இருக்கலாம்.

 
Disclaimer